புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நவீன இசைக்கருவிகளின் மோக் இசையின் முன்னோடியாக திகழ்ந்தவரான ராபட் மோக் என்பவரை கூகுள் இன்று சிறப்பித்து காட்டியுள்ளது.மே 23ம்திகதி 1934ல் நீயுயோர்க்கில்
பிறந்த 'ராபர்ட் மோக்'(Robert Moog) சிறுவயது முதலே இசைக்கருவிகளின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார். அதிலும் தேராமின் (theremin) என்ற இசைக்கருவிமேல் நாட்டம் கொண்டிருந்தார். நவீன இசைக்கருவிகள் வரத்தொடங்கிய காலத்தில் 1964ல் மோக் ஸிந்தஸைஸர் எனும் முதல் மின்னணு இசைக்கருவியை அறிமுகப்படுத்தினார்.

நவீன ராக் இசையை மாற்றியமைத்த இக் கருவி புதுமையான ஒலிகளை எளிதாக எழுப்பப்கூடிய வகையில் அமைந்ததால் மிகப் பிரபலமானது. பின்நாட்களில் பல மின்னனு இசைக்கருவிகள் இதனை முன்னோடியாக வைத்தே வரத்தொடங்கின.

மோக் ஸிந்தஸைஸர் இசைக்கருவி பல பிரபலமான ராக்/பாப் ஆல்பங்களிலும், Rolling Stones, Grateful Dead போன்ற இசைக்குழுக்களிலும் பயன்படுத்தப்பட்டன. இப்படியான பல இசைக்குழுவில்லுள்ள இசைக்கலைஞர்கள் ராபர் மோக்கை அந்நாட்களில் கௌரவப்படுத்தினர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையிலும் மின் நுட்பத்துறையிலும் பட்டம் பெற்ற ராபர்ட் மோக் இசைக்கருவிகள் குறித்த ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். கிராமி விருதுகள் போன்ற இசைக்கான விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர் 2005ல் ஆகஸ்ட் 21ல் காலமானார்.

மோக் ராபர்ட்டின் பிறந்தநாளனான இன்று அவரை சிறப்பிக்கும் முகமாக கூகுள் தனது ஹோம்பேச்சில் அவர் உருவாக்கிய மோக் ஸிந்தஸைஸர் இசைக்கருவியை லோகோவா காட்சிப்படுத்தியுள்ளது. அத்துடன் அதனை இசைக்கும் வகையிலும் இசைத்ததை பதிவு செய்து கூகுள் ப்ளஸ் இல் தரவேற்றம் செய்யும் வகையிலும் அமைந்திருக்கிருக்கிறது கூகுள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top