புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் இறுதிச் சடங்கு செய்ய 3 ஆண்டு கொண்ட படிப்பு கற்பிக்கப்படுகிறது. சீன நாட்டில் பழங்கால சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளும் தொழில் செய்வதை துரதிர்ஷ்டம் என அவர்கள்
கருதுகின்றனர்.

ஆனால், சீனாவில் லாபம் கொழிக்கும் தொழிலாக தற்போது இது விளங்கி வருகிறது. நாட்டின் அதிக வருமானம் தருவதாக கருதப்படும் 10 தொழில்களில் இதுவும் ஒன்று. இத்தொழிலில் வருடத்திற்கு 31 பில்லியன் டாலர் புரள்கிறது.

தற்காக நாடு முழுவதும் கல்வி கற்று கொடுக்கும் 4 தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கு உள்ளன. வருடந்தோறும் 1,500 மாணவர்கள் 3 வருடம் கொண்ட இப்படிப்பினை நிறைவு செய்து வெளியே வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top