புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஹேம்பர்க்கில் உள்ள பொருளாதார ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.2012ஆம் ஆண்டின் முதல் கால் பகுதியில் 32,760 இளைஞர்கள் திவாலானதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது, திவாலாகும் மொத்த
நபர்களில் மூன்றில் ஒருவர் இளைஞராக இருக்கின்றனர்.

18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் திவாலானதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு பணப்புழக்கத்தில் அனுபவம் இல்லை, சேமிக்கும் பழக்கமும் இல்லை என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். செலவு செய்யவும், சேமிக்கவும் இளைஞர்களுக்கு போதிய பழக்கமோ, அனுபவமோ இல்லாத காரணத்தால் விரைவில் திவாலாகின்றனர்.

இந்நிலையில் வயதானவர்கள் திவாலாவதும் தற்போது 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்களின் ஓய்வூதியம் குறைந்து விட்டதாலும், இவர்களுக்கு சம்பளம் குறைவாக இருப்பதாலும் இவர்களும் திவாலாகி விடுகின்றனர்.

ஆக 25 வயதுக்குட்பட்ட இளைஞரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவரும் தாம் வாங்கிய கடனை அடைக்க இயலாமல் தவிக்கின்றனர்.

ஜேர்மனி கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக கடன் வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கருதியது. கடந்த 1999ஆம் ஆண்டு 500 மில்லியனாக இருந்த கடன், கடந்த 2010ஆம் ஆண்டில் 602 மில்லியனாக வளர்ந்தது.

கடனைப் போலவே கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. 3357ஆக இருந்த திவாலானோர் எண்ணிக்கை, இந்தப் பத்தாண்டுகளில் 108,798ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top