புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கமலஹாசனுக்கும் (வயது28), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் லோகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 29-ந்தேதி திருமணம் கோலாகலமாக நடந்தது.


அவர்களின் சம்பிரதாயபடி இரவு புதுமண தம்பதி கோவிந்தனின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் திருமண வீட்டில் விருந்து நடந்தது
அன்றைய தினம் (30-ந்தேதி) இரவு அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் புதுமண தம்பதி சென்றனர். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் புதுமண தம்பதி இருந்த அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகப்பட்ட மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பதற்றத்துடன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் சென்றனர்.

அங்கு கணவன்-மனைவி இருவரும் வாயில் நுரையுடன் மர்மமான முறையில் செத்து கிடந்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது மர்மமாக உள்ளது. திருமண வீடு மறுநாளே சாவு வீடாக மாறியதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த வீட்டுக்கு வந்தனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொடைக்கானலில் தற்போது நிலவிவரும் கடும் குளிருக்கு, வீட்டுக்குள் புகை மூட்டம் போட்டு இருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறி அவர்கள் இறந்து இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top