புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிச்சயிக்கப்பட்டவர் ஒருவர், தாலி கட்டியவர் இன்னொருவர் என்ற வகையில் நடந்த இந்த திருமணம் வைபவம் பற்றிய விவரம் வருமாறு கோயம்பேடு ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு சுகன்யா (25) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுகன்யாவுக்கும்
செஞ்சியைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வெங்கடேஷ் பெங்களூரில் பீசா விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது பெண்ணுக்கு 10 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 2 பவுன் நகையும் போடுவதாக பேசப்பட்டது.திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் வெங்கடேஷ் சுகன்யாவிடம் செல்போனில் பலமுறை பேசினார். இதனை மணப்பெண்ணின் உறவினர்களும் மகிழ்ச்சியாக அனுபவித்தனர்.
சுகன்யா-வெங்கடேஷ் திருமணம் அமைந்தகரை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை நடப்பதாக இருந்தது. நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதது. இதில் மணமகன் வெங்கடேஷ் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் உறவினர்கள் திருமண வேலையில் ஈடுபட மணமகன் வெங்கடேஷ் பெங்களூரில் இருந்து வந்த தனது நண்பர்களுடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் 5 இளைஞர்கள் மற்றும் ஒரு இளம்பெண் இருந்தனர்.

அந்த இளம் பெண்ணை தனது தோழி என்று சுகன்யாவிடம் அறிமுகப்படுத்தியிருந்தார். நள்ளிரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்த அவர்களுக்கு சுகன்யாவின் தந்தை தேனீர் வாங்கிக் கொடுத்தார். 2.30 மணி அளவில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் காரில் வெளியே சென்றார். ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இன்று காலை 5 மணி அளவில் திருமண நலுங்கு நிகழ்ச்சி தொடங்கியது. இதற்காக மணமகனை தேடினார்கள். ஆனால் வெங்கடேஷ் அறையில் இல்லை. அவர் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பைகள் எதுவும் அங்கு இல்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் திருமண மண்டபம் பரபரப்பானது.

வெங்கடேஷ் பற்றி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கேட்டபோது அவர்களும் செய்வதறியாது தவித்தனர். மணமகன் மாயமானதை அறிந்து சுகன்யா கண்கலங்கினார். அதற்குள் பொழுதும் விடிந்தது. இந்த நிலையில் மதுரவாயலை சேர்ந்த வாலிபர் சுதிர்குமார் என்பவருக்கு பெண் தேடுவதாக சுன்யாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். உடனடியாக அவரை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறினார்கள். அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார்.

உடனே அவர் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுகன்யாவும், சுதிர்குமாரும் தனியாக பேச அனுமதிக்கப்பட்டனர். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். நடந்த சம்பவம் முடிந்துபோன ஒன்று. அதுபற்றி எதுவும் பேசகூடாது என்று சுகன்யா கேட்டுக்கொண்டார். இதை சுதிர்குமாரும் ஏற்று திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதனால் சோகத்தில் இருந்த மணமகள் வீட்டார் நிம்மதி அடைந்தனர். திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்கு சுதிர்குமார்-சுகன்யா திருமணம் நடந்தது.
இதற்கிடையே தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன் வெங்கடேஷ் குறித்து அமைந்தகரை போலீசில் மணமகள் உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top