
. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு உதவிய 14 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. இங்கு ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
ஆனால், சட்டவிரோதமாக சிலர் பல மனைவிகளுடன் குடித்தனம் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
மேலும் அதிகாரிகள் பலர் ஊழலில் திளைக்கின்றனர், நடிகைகளுடன் தொடர்பு வைத்துள்ளனர் என்றும் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்ஜி மாகாணத்தில்
உள்ள ஜியாவோடியான் மாவட்ட ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் உறுப்பினர் லீ ஜூன்வென் (43), 4 மனைவிகள், 10 குழந்தைகளுடன்
வாழ்வதாக மீடியாக்களில் தகவல் வெளியானது. இவர் ஜிகுவான் கிராம தலைவராகவும் இருந்துள்ளார்.
புகாரின்படி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய போது, தகவல் உண்மைதான் என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லீயை
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவிகள் 4 பேருக்கு திருமண சான்றிதழ், 10 குழந்தைகளுக்கு இருப்பிட
சான்றிதழ் போன்ற எல்லா ஆவணங்களையும் பெற்றுள்ளார். இதற்கு 14 அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது க
ண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக