புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மொன்ட்டி, போர்ட்டெர் மற்றும் கின்னி எனும் நியூசிலாந்தைச் சேர்ந்த மூன்று மோப்ப நாய்களை நீங்கள்  இப்போது உலகமகா பிரபலம்.


அதாவது இம் மூன்று நாய்களும் போலிசார் சொல்லிக் கொடுத்ததற்கு ஏற்றவாரு கார் ஓட்டும் பயிற்சியில் நன்கு தேறி வருவதுடன் ஏனைய நாய் உரிமையாளர்களையும் தங்கள் நாய்களுக்கு இப்பயிற்சியை வழங்க முன்வரும் விதத்தில் புத்திசாலித்தனமாக செய்து காட்டியும் அசத்தி வருகின்றன.

இந்நாய்களுக்கு டிரைவிங் பயிற்சி அளிக்கப் படுவதன் மூலம் விலங்குகளுக்கு எதிராக வன்முறையைக் கையாண்டு வரும் மனிதர்களுக்கு அவற்றின் உரிமையை வலியுறுத்ததும் ஒரு முயற்சியாக இது உருவெடுக்கும் எனக் கருதப்படுகின்றது. giant schnauzer,whippet cross மற்றும் beardie cross என அழைக்கப்படும் வகைகளைச் சேர்ந்த இந்த மூன்று நாய்களும் காரின் உள்ளே இலாகுவாக அமர்ந்து தமது முன்னங்கால்களால் ஸிடியரிங்கையும், கியரையும், பின்னங்காலினால் பிரேக்கையும் இயக்க வல்லவையாகும்.

மேலும் டிரைவர் சீட்டில் ஓட்ட வசதியாக இவை அமர்ந்து உரிமையாளரின் வழிகாட்டுதல்களை உணர்ந்து வண்டியை சிறிது தூரம் செலுத்தியும் காட்டியுள்ளன. காரினை ஸ்டார்ட் செய்தல் கியரின் ஒழுங்கு, வேகக் கட்டுப்பாடு என ஒவ்வொரு வழிநடத்துதலையும் உணர்ந்து நாய்கள் செயற்பட அவற்றிட்கு மிகுந்த நேரம் எடுப்பதாகவும் இது சிரமமான ஒரு பயிற்சி எனவும் அதன் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மனிதர்களைப் போல் வாகனத்தை வாகுவாக இயக்க நாய்களால் முடியாது என்ற போதும் இதில் அவற்றை ஈடுபடுத்துவதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது நாய்களின் இந்தத் திறமையைப் பொதுமக்கள் காணும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நியூசிலாந்தில் உள்ள தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் அடுத்த கிழமை ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளனர். இதில் வாகனத்தை தடையில்லாமல் செலுத்துவதுடன் குறுகிய பாதையில் செல்லும் போது பிரேக் பிடிக்கவும் நாய்கள் செய்து காட்டவுள்ளன.

இந்நிலையில் இந்த நாயின் பயிற்சியாளர்கள், மேலே குறிப்பிட்ட நாய்கள் வாகனத்தை ஓட்டிக் காட்டும் போது பழக்க தோஷத்தில் ஒளிக் கம்பங்களினால் ஈர்க்கப் பட்டு வண்டியைத் திசை திருப்பாமல் இருப்பதே பெரிய விடயம் என நகைச்சுவையாகக் கூறியுள்ளனர்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top