
இந்நிலையில், வாடகைக்கு தங்கியிருந்தவர்களை வீட்டை விட்டு செல்லுமாறு குறித்த பெண் கோரி வந்துள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து வந்ததுடன் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல் உச்சத்தை அடைந்த போது பெண் கிணற்றில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குறித்த பெண்ணின் சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சமபவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கொலை சந்தேகநபர் தப்பியோடிவிட்டதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு்ளளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக