
பேசுவாராம். இதனால் அவர்களுக்குள் நாளடைவில் நெருக்கம் அதிகமானது.
இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து அவர் பெற்றோரிடமும் தெரிவிக்கவில்லை. கர்ப்பம் வளர்ந்தது. இந்நிலையில் மாணவி கல்லூரிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே இருந்து கொண்டார். பெற்றோர் கல்லூரிக்கு போகும்படி வற்புறுத்தியும் அவர் போகவில்லை. இந்நிலையில் ராஜகிரியை சேர்ந்த பெண்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றனர். அவர்களுடன் முன்னாள் நர்சிங் மாணவியும் பாதயாத்திரை சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு இடுப்புவலி ஏற்பட்டது. கழிவறைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதை அறிந்து, உடன் சென்றவர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு தந்தை, மாமா சந்திரசேகர் தான், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் கூறினாராம். அதைத்தொடர்ந்து பாபநாசம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக