புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய காலத்தில் பெண்கள் என்ன தான் வேலைக்கு சென்றாலும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விற்கும் வாஷிங் மிசின், கிரைண்டர், வேக்கியூம் கிளீனர் போன்ற பொருட்களை வாங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு வீட்டை சுத்தம்
செய்ய சோம்பேறித்தனப்பட்டால், உடல் வளையாமல் இருந்து, அதனால் ஆரோக்கியத்திற்கு தடை ஏற்படும்.

ஏனெனில் வீட்டை சுத்தம் செய்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்வதால், உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் கரையும். அதுவும் நாம் செய்யும் வேலையைப் பொருத்து.. உதாரணமாக, வீட்டில் தொடர்ந்து 1 மணிநேரம் வேலை செய்தால், ஜிம்மில் அரை மணிநேரம் ஒர்க் அவுட் செய்ததற்கு சமம்.

செய்யும் வேலை அனைத்து நம் உடலை வளைந்து கொடுத்து செய்யுமாறு இருக்க வேண்டும். உதாரணமாக, வீட்டை பெருக்க துடைப்பத்தை பயன்படுத்துவது, பாத்திரங்களை கழுவுவது போன்றவாறு இருக்க வேண்டும். இவ்வாறு ஒரு நல்ல உடற்பயிற்சி இருக்கும் போது, எதற்கு ஜிம்மிற்கு பணத்தை செலவழிக்க வேண்டும். இதனால் வீடும் சுத்தமானது போல் இருக்கும், உடலுக்கு ஆரோக்கியமான ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கும்.

* மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் ஏற்படும் போது வீட்டை சுத்தம் செய்வதால் சரியாகும். வீட்டை சுத்தம் செய்யும் போது மனம் அந்த வேலையில் கவனத்தை செலுத்துவதால், மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் பறந்துவிடும். இதனால் மனம் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் வெறுப்புடன் வேலையை செய்யாமல், மிகவும் ஆசைப்பட்டு செய்ய வேண்டும்.

* உடற்பயிற்சியிலேயே சிறந்த பயிற்சி என்றால் அது வீட்டை சுத்தம் செய்வது தான். இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படுவதோடு, கை கால்கள் நன்கு வளைந்து, தசைகள் நன்கு வலுவாகின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலையை செய்தால், எலும்புகள் வலுபெற்று பிரசவத்தின் போது, எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

* துணியை துவைக்க வாஷிங் மிசினை பயன்படுத்தாமல், கைகளினாலேயே துவைத்தால், கைகள் வலுபெறுவதுடன், இடுப்பு எலும்புகளும் நன்கு வலுவோடு இருக்கும்.

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் போது, சிறிது நேரம் வீட்டு வேலையை செய்தால் கவனச்சிதறல்கள் நீங்கும். சுத்தம் செய்யும் போது வேறு எந்த நினைப்பும் இருக்காது, சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு செய்வதால், கவனச்சிதறல்கள் ஏற்படாமல் இருப்பதோடு, வீடும் சுத்தமாகும். பெண்களே! வீட்டை சுத்தம் செய்வது என்பது செலவழிக்காமல் செய்யும் ஒரு உடற்பயிற்சி. எனவே வீட்டை சுத்தம் செய்யுங்க!!! உடலை ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க!!!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top