
வெப்பப் பகுதியில் (tropical region) வாழும் கருமை நிற மக்களிடம் மெலானின் எனப்படும் கருமை நிறமி மிகுதியாக இருக்கும்; இதற்குக் காரணம் இப்பகுதியில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சின் (ultra violet radiation) அடர்த்தி வலிமையாக இருப்பதே ஆகும். இவ்வாறு கூடுதலாக அமைந்துள்ள மெலானின், புற ஊதாக் கதிர்வீச்சின் ஆபத்திலிருந்து தோலைப் பாதுகாக்கிறது. புவியின் நடுக்கோட்டிற்குத் தொலைவில் அமைந்துள்ள அட்சரேகைப் (latitude) பகுதியில் வாழும் மக்களிடம் குறைவான கருமை நிறமி அமைந்திருப்பதால் அவர்களின் தோல் வெளிறிய நிறத்தில் அமைந்துள்ளது.
வெளிறிய நிறம் கொண்ட இத்தோல், இப்பகுதியில் சூரிய வெளிச்சத்தின் குறைவான அடர்த்தியின் காரணமாக டி-வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்தை உடலில் உற்பத்தி செய்கிறது. தோலின் நிறத்திற்குக் காரணமாக அமையும் பிறவற்றில் தோலின் இரத்த நாளங்களில் செல்லும் இரத்தம் மற்றும் தோல் திசுவில் அமைந்துள்ள இயற்கையான மஞ்சள் வண்ணத் தடங்கள் (yellowish tinge) ஆகியனவும் அடங்கும்...
0 கருத்து:
கருத்துரையிடுக