புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் 100 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற வங்கியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையிலிருந்து நேற்றிரவு புகை வருவதை கவனித்த காவலாளி, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து அதிகாரிகள் வந்து பார்த்த போது, பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்தை சோதனையிட்டதில், வங்கிக்கு அருகில் உள்ள கார்ஷெட்டில் 100 அடி நீளத்திற்கு சுரங்கம் வெட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பெர்லின் நகர பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விரிவான முறையில் திட்டமிட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது. 100 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி பாதுகாப்பாக சாரங்களையும் அமைத்து, கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.




பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சுரங்கத்தின் வழியாகவே வெளியே சென்ற அவர்கள், தடையங்களை அழிப்பதற்காக சுரங்கப் பாதையில் தீமூட்டி தப்பித்துள்ளனர் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top