புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஒரு மத்திய தரக் குடும்பம் ரஷ்யாவுக்கு உளவு வேலை பார்த்துள்ளனர்.

இவர்களின் உண்மைப் பெயர்களை ஜேர்மனிப் பொலிசார் வெளியிடவில்லை.

இவர்களின் மகளுக்குக் கூட தன் பெற்றோர் ரஷ்ய உளவாளி என்பது தெரிந்திருக்கவில்லை.

ஆண்டிரியாஸ், ஹீட்ருன் என்று பொலிசாரால் பெயர் சூட்டப்பட்ட இத்தம்பதியர் 1988ம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் KGB (அரசு பாதுகாப்புக் குழு) மூலமாக ஜேர்மனியில் குடியமர்த்தப்பட்டனர்.

பின்பு இவர்கள் SVR என்ற அயல்நாட்டு உளவுப்பணிப் பிரிவில் வேலை பார்த்து வந்தனர்.

இத்தம்பதியினர் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ஹோர்ஸ்ட்- பீட்டர் போஷ்கே, இவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை உண்டு என்றார்.

ஆனால் இவர்கள் தங்களை ஆஸ்டிரியக் குடியுரிமை பெற்றவர் என்றே சொல்லிவந்தனர்.

இவர்களில் ஒருவர் பிளவுபட்ட ஜேர்மனியில் வந்து குடியேறினர், அடுத்தவர் 1990ம் ஆண்டில் இங்கு வந்தார்.

கடந்த மூன்றாண்டுகளாக இவர்களின் நடவடிக்கை குறித்து மத்தியக்கூட்டரசு ஆராய்ந்துள்ளது.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல், ராணுவ ரகசியங்களைக் கடத்துவதே இவர்களின் உளவுப் பணியாகும்.

குறிப்பாக கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கான நேட்டோவின் ராணுவ ரகசியங்களைக் கடத்தி வர வேண்டும்.

இத்தகவலை மத்தியக் கூட்டரசு வழக்கறிஞர் உல்ஃப் ஸீக்மண்ட் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top