புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆண்டாள் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் அவுஸ்திரேலிய தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத எண்ணெய் காப்பு, உற்சவத்தை காண அவுஸ்திரேலியா வெஸ்ட் மெல்பர்ன் நகரில் இருந்து பீட்டர் (63), அவரது மனைவி ஹெலன் (54) தம்பதியினர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றனர்.

கோயில் அருகேயுள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் 7 நாட்களும் தங்கி, தினமும் ஆண்டாள் வீதியுலா நிகழ்ச்சி, எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இது குறித்து ஹெலன் கூறுகையில்...

‘‘எனது கணவர் பீட்டர், வெஸ்ட் மெல்பர்ன் பகுதியில் எலக்ட்ரிகல் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன் திருவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை தரிசித்தோம்.

அதன் பின்னர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விழாவுக்கு வருகிறோம். தேரோட்ட நிகழ்ச்சிக்கும் வர திட்டமிட்டுள்ளோம்.

ஆண்டாள் குறித்து நாங்கள் சேகரித்த தகவல்களை ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம்,

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top