புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாம் வாழும் பூமியின் பெரும் பகுதி சுருங்கி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம்
ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.

மேலும் இரண்டரை மில்லியன் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள நிலபரப்பின் நிலை குறித்த புகைப்படங்களும் அடக்கம்.

இந்நிலையில் உலகில் 4வது மிகப்பெரிய ஏரியான ஏரல் சீ தற்போது மெல்ல சுருங்கி, அதனுடைய மொத்த பரப்பளவில் 10 சதவிகிதம் அளவே மிஞ்சியுள்ளது.

இதில் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, பூமியின் பெரும் பகுதி சுருங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படங்களில் மிஸ்ஸிசிப்பி ஆற்றின் தற்போதைய தோற்றம், பொலிவியா நாட்டில் குறைந்த வனவளம், செர்னோபில் அணு உலையின் 1975ம் ஆண்டு தோற்றம், உலகின் 6வது பெரிய ஏரியான சட் தற்போது அதன் மொத்த பரப்பளவில் வறட்சி காரணமாக 20ல் ஒரு பங்கு அளவிற்கு சுருங்கிய வடிவம் போன்றவை முக்கியமான ஒன்றாகும்.

இதற்கிடையே இந்த விண்கலத்தின் முக்கிய பாகமான கைரோஸ்கோப் செயலிழந்ததை தொடர்ந்து விண்கல பயன்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
 
Top