புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் ஸ்டட்கார்ட்டை(Stuttgart) மையப்படுத்தி தொடங்கப்படும் ரயில்வே விரிவாக்க திட்டம் உறுதியாக தொடர்ந்து நடைபெறும் என்று ஜேர்மனிய அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பீட்டர்
ராம்சாயர்(Peter Ramsauer) தெரிவித்துள்ளார்.
ஸ்டட்கார்ட்டின் ரயில் நிலையத்தின் அடியில் 57 கிலோமீற்றருக்கு புதிதாக பாதாள ரயில்கள் விடப்படுவதே இத்திட்டமாகும்.

கடந்த 2011ம் ஆண்டு இத்திட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தியபொழுது மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதற்கான செலவு அதிகமாகும் என்பதை அறிந்த மக்கள் சென்ற வாரம் நடத்திய வாக்கெடுப்பில்பொழுது தங்கள் ஆதரவுகளை குறைத்துவிட்டனர். எனினும் இதற்காகத் திட்டத்தை நிறுத்திவிடப்போவதில்லை என்று அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் கூறிய செலவை விட இன்று 5.5 பில்லியன் யூரோ செலவு அதிகரிக்கும் என்று அரசு தெரிவித்ததும் இத்திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும் பாராளுமன்றக் குழுவின் முன்பு இந்தச் செலவு அதிகரிப்பது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுகொண்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top