புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தென்னாப்பிரிக்காவில் மாட்டுக்கறியை உள்ளடக்கிய பர்கர் போன்ற உணவுப்பொருள்களில் கழுதை மாமிசம் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது குறித்து ஸ்டெலன்போஷ் பல்கலைகழக உணவுத்துறையின் மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் மாட்டுக்கறி உணவுகள் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் அதனுடன் சேர்த்து பரிமாறப்படும் சட்னிகள் என 28 சதவீத உணவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மாட்டுக்கறி உணவுகளில் நீர் எருது, கழுதை ஆகியவற்றின் மாமிசமும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில், மாட்டுக்கறியில் கலப்படம் செய்யப்படும் எருது மற்றும் கழுதை கறிகளால் உணவு துறை விதிகள் மீறப்படுவதோடு மத உணர்வுகள் ஆரோக்கியம் உள்ளிட்டவையும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பர்கர் உணவில் மாட்டுக்கறிக்குப் பதிலாக குதிரைக் கறி கலப்படம் செய்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top