புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் இருந்து மடகஸ்கர் நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 மில்லியனிலிருந்து 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு சிறிய கண்டத்தை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப் பெருங்கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில் கடலுக்கு அடியில் உள்ளதாக கூறியுள்ளனர்.

மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லியனிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும் மினரல், இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்ந்துள்ளனர். இந்த சிறிய தாதுத் துகள்கள் குறிப்பிடத்தக்க ஒரு கண்டுபிடிப்பு என்று சொல்லப்படுகிறது. இந்த சிர்கோன் துகள்கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த சிறிய மொரிசியா கண்டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது. பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்து விட்டன என்று்ம் கூறியுள்ளனர்.

இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு பாறை அடுக்கு, தெற்கில் கோண்டுவானாவாகவும் வடக்கில் லாரேசியா எனவும் பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டுகள் இடைப்பட்ட காலங்களில், பிரிந்து மடகஸ்கர், இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் அண்டார்டிகா என மாறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top