புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரளாவில் தன்னுடைய 2 மகள்களை ரூ. 20 லட்சத்திற்கு விற்க முயன்ற அர்ச்சகரை போலீசார்
தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள உருக்குன்னு கிராமத்தைச் சேர்ந்தவர் சஜி போற்றி(38). அர்ச்சகர். அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சஜி தன்னுடைய 12 மற்றும் 9 வயது மகள்களை தன்னுடனே வைத்துக் கொண்டார். இந்நிலையில் சஜி கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே முதல் மனையின் தாயார் சஜி பற்றி தென்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, என் மகளின் கணவரான சஜி போற்றி சமீபத்தில் வீட்டின் அருகே உள்ள உணவகத்தில், டெல்லியைச் சேர்ந்த நபரிடம் தன் இரு மகள்களையும் விற்பதற்காக பேரம் பேசியுள்ளார்.

அந்த நபரிடம் இரு மகள்களையும் காண்பித்துள்ளார். இருவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளார். பேரம் பேசப்பட்ட தொகை சஜியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதும் அவர் மகள்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு உள்ளார் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் சஜியை விசாரிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரின் 2 மகள்களையும் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மகள்களை விற்க முயன்ற அர்ச்சகர் சஜியை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சில அமைப்பினர் காவல் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top