புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பழநி அருகே ஆண்டிப்பட்டி மலை குகையில், சங்க கால தமிழர் வரைந்த, 10க்கும் மேற்பட்ட ஒவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகேயுள்ள, ஆண்டிப்பட்டி மலைக் குகையில், தொல்லியல் ஆய்வாளர், நாராயண மூர்த்தி, கன்னிமுத்து, பழனி சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். குகையில் சங்க காலத் தமிழர், காதலையும், வீரத்தையும், போற்றி வந்ததை குறிப்பிடும், குறிஞ்சி நில மக்களின் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஓவியத்தில், விழாச் சடங்கிற்காக பெண்கள் கூட்டமாக, பானைகளில் நீர் எடுத்துச் செல்லும் காட்சியும், மற்றொன்றில் பெண்கள், ஆண்கள், குழந்தையுடன் கைகோர்த்து, ஆடிப்பாடும் காட்சியும் வரையப்பட்டுள்ளது.

இவ்வகை நடனத்தை பளியர், புலையர் போன்ற, பழங்குடி மக்கள் இன்றளவும் ஆடுகின்றனர். யானை, புலி, முள்ளம் பன்றி போன்ற விலங்குகள், தனி மனித ஆண்,பெண், வேட்டை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நாராயண மூர்த்தி கூறியதாவது:

ஆண்டிப்பட்டி மலைக்குகை ஓவியங்கள், 2,000 முதல் 3,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது.

ஒரு ஓவியத்தில் குடும்பத்துடன் எல்லோரும், ஆடு ஒன்றை பலி இடுவதற்காக அழைத்துச் செல்லும் காட்சியும் உள்ளது.

மற்றொரு ஓவியத்தில், யானையை அகழி வெட்டி பிடிப்பதை போன்ற காட்சியும், அதன் தொடர்ச்சியாக, ஆண்கள் ங்குசம் கொண்டு, அந்த யானையை அடக்கும் காட்சியும், யானையை பழக்கப்படுத்தி, அதன் மீது அமர்ந்து செல்லும் காட்சியும், தேர்ந்த படக்கதைப்போல (கார்ட்டூன் வடிவத்தில்) வரையப்பட்டுள்ளது.

பாதிக்கு மேற்பட்ட ஓவியங்கள், மிக மங்கிய நிலையில், உள்ளதால் அவற்றின் அடையாளம் காண முடியவில்லை. இக்குகையில், சங்க காலத்தமிழர்கள் பயன்படுத்திய, பானை ஓடுகள், நகக்குறி ஓடுகளும் கிடைத்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top