புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணினி கோளாறு காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வை மேற்கொண்டுவரும் கியூரியாசிட்டி ஆய்வுக்கலத்தின் செயல்பாடு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாஸா) செவ்வாய் கிரக ஆய்வுத் திட்ட மேலாளர் ரிச்சர்டு குக் கூறியிருப்பதாவது:

கியூரியாசிட்டி ஆய்வுக்கலத்துடன் தொடர்புடைய கணினியில் பழுது ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்கலத்தின் செயல்பாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைத்துள்ளோம். பழுதை நீக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்து ஓரிரு நாள்களில் பழுது சரிசெய்யப்படும். அதன் பிறகு மீண்டும் ஆய்வுக்கலம் வழக்கமான செயல்பாட்டு நிலைக்கு மாற்றப்படும் என்றார்.

விண்வெளிக்குச் செல்லும் விண்கலத்தைப் போலவே கியூரியாசிட்டி ரோவரிலும் ஏ மற்றும் பி என 2 கணினிகள் இருக்கும். இதில் ஏ கணினி பழுதடைந்துள்ளது. பி கணினியின் உதவியுடன் தான் அந்த ஆய்வுக்கலத்தின் செயல்பாடுகள் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top