புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நியூயார்க் நகரில் உள்ள ராக்வில்லா சென்டர் என்ற இடத்தில் வசித்து வரும் ரொபர்ட் ஷியாவெல்லி (வயது 42) வலிப்பு மற்றும் நரம்புத்தளர்ச்சி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் கடந்த மாதம் நியூயார்க் பொலிசார் அவர் மீது இரண்டு குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்தனர். அதில் அவர் செய்த குற்றமாக குறிப்பிடப்பட்டிருந்தது அவர் சப்தமாக சிரித்ததுதான்.

கடந்த மாதம் தொடர்ந்து 12 மற்றும் 13ம் திகதிகளில் மாலை 6 மணியளவில் அவர் சப்தமாக சிரித்தமையால் தான் தொந்தரவு செய்யப்பட்டதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் புகார் செய்துள்ளார்.

அது உண்மை என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், ரொபர்ட் மீது இரு குற்றப்பத்திரிகை அளித்துள்ளார். ஒவ்வொன்றும் 15 நாள் சிறைத் தண்டனையையும் 250 டொலர்கள் அபராதத்தையும் பெற்றுத்தந்துள்ளது. தன்னுடைய நோய் குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஏளனம் செய்வதால் தான் சத்தமாக பதிலுக்கு சிரிப்பதாக ரொபர்ட் கூறியுள்ளார்.

ஆனால் இந்த சிரிப்பு சப்தம் கோபத்தையும், வெறுப்பையும், தொந்தரவு செய்யக்கூடியதாகவும், மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். ஆனால் அப்படி சிரித்ததால் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top