புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில் நிக்கோலா எட்கிங்க்ட்டன்(Nicola Edgington) என்ற மனநோய் பாதிக்கப்பட்ட பெண் தன் தாய் மற்றும் இரண்டு பெண்களை கொலை செய்துள்ளதால் இவருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.

தெருவில் பேருந்துக்காக் காத்திருந்த கிளார்க்(Clark) என்ற பெண்னை காரணமில்லாமல் கத்தியால் தாக்கியுள்ளார். கிளார்க் இவரிடமிருந்த கத்தியைப் பிடுங்கி விட்டு இவளைக் கீழே தள்ளி கால்களால் உதைத்துள்ளார். உடனே வெறிக்கொண்ட வேங்கை போல் எழுந்த நிக்கோலா அருகிலிருந்த இறைச்சிக்கடைக்குள் சென்று பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு வந்து தாக்கியதில் கிளார்க் உயிரிழந்துள்ளார்.

பின்னர் சட்ட அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் திருமதி ஹோட்கினையும்(Hodkin) கொலைவெறியோடு நிக்கோலா தாக்கியுள்ளார்.

இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயைக் கொன்ற வழக்கில் கைதாகியபொழுது நிக்கோலாவுக்கு மனநோய் என்று விடுவிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்துள்ள அவர் மீண்டும் கொலைசெய்துள்ளார்.

வழக்கு விசாரணையின்பொழுது நீதிபதி நிக்கோலாவுக்கு மனச்சிதைவு நோய் தாக்குதல் இருந்தாலும் இந்தக் கொலைகளும் இவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top