புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் புரூக்ளின் நகரத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ரைசி கிளாபெர்சுக்கு ஏற்பட்ட பிரசவலி காரணமாக கணவர் நாச்மேன் அவரை அழைத்துக் கொண்டு அவசரமாக டக்சியில் சென்றார்.

அப்போது எதிரே வந்த பி.எம்.டபிள்யூ. கார் மோதி டக்சி அப்பளமாக நொறுங்கியதில் நாச்மேன், ரைசி கிளாபெர் என்ற 21 வயது ஜோடி காருக்குள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் அவர்களை வெளியே எடுத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.

இதில் டக்சி ஓட்டுநர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அங்கு மருத்துவமனையில் உடல்களை மருத்துவர்கள் சோதித்தபோது பெற்றோர்கள் இறந்த நிலையில், குழந்தை மட்டும் தாயின் கருவில் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனே, சிசேரியன் செய்யப்பட்டு இறந்த தாயின் வயிற்றில் இருந்த அந்த ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

அந்த குழந்தை 1 கிலோ 800 கிராம் எடையுடன் இருந்தது. ஆனால் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்ட அந்த குழந்தை இன்று காலை 5 மணியளவில் இறந்து விட்டது. பின்னர் அக்குழந்தையின் உடலும், அவனது பெற்றோர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

இந்த சோகச் சம்பவத்தில் அங்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top