புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்ஸின் மார்சைல் நகரத்தில் உள்ள பல் மருத்துவமனைக்கு 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று வந்தார்.

டொக்டரின் அறைக்குள் அவர் சென்ற சில நிமிடத்தில் திடீரென உள்ளிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனையின் ஊழியர்கள் பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றினார். பொலிசார் வந்து மருத்துவரின் அறைக்குள் சென்று பார்த்தபோது, அந்த நபர் தன்னுடைய கைத்துப்பாக்கியால் அந்த மருத்துவரை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

மேலும் அவர் கையில் இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்ததையும் கண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பொலிசாரை நோக்கி சுட ஆரம்பித்த அந்த நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். சிகிச்சை தொடர்பான சட்டப் பிரச்சினையில் அவன் டொக்டரைக் கொன்றிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

இந்த சம்பவம் மார்சைலில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவே மக்கள் எண்ணுகின்றனர்.

அங்குள்ள துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள காடுகளில் நடக்கும் போதை மருந்து வியாபாரக் குழுவினர் இடையில் ஏற்படும் சண்டைகளே இத்தகைய பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன.

சென்ற மாதம் நான்கு பேர் இதுபோல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2012ஆம் வருடம், இதேபோல் 24 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் ஐரோப்பாவிலேயே மார்சைல் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அரசியலாளர்கள் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க பலமுறை இராணுவத்தினரை அழைத்திருப்பதும் நடந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top