புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பிக்க ஓட்டலின் முதல் மாடியிலிருந்து குதித்த பிரித்தானியா பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பிரித்தானியாவில் பல் டொக்டராக பணியாற்றும் 25 வயது பெண் மூன்று வாரங்களுக்கு முன்பு, சுற்றுப் பயணமாக இந்தியா சென்றார்.

பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்ரா சென்று அங்கு தாஜ்மகாலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலை 4.00 மணிக்கு அவர் ஓட்டல் அறையை காலி செய்வதாக இருந்தது. அதனால் தன்னை எழுப்பி விடும்படி ஓட்டல் நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ஓட்டலின் உரிமையாளர் சச்சின் சவுகான் நேற்று அதிகாலை 3:45 மணிக்கு அறையின் கதவை தட்டினார்.

கதவை திறந்ததும் "தங்கள் ஓட்டலில் வெளிநாட்டினர் தங்கினால் அவர்களுக்கு இலவசமாக மஜாஜ் சேவை அளிக்கப்படும் என தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த பிரித்தானியா பெண், அறை கதவை அடைத்தார். ஆனால் சச்சின் சவுகான், ஓட்டலின் பாதுகாவலர்களுடன் வந்து அறைக்கதவை உடைக்க முயன்றார்.

இதனால் பயந்து போன பிரித்தானியா பெண், தங்கியிருந்த அறையை உட்புறமாக பூட்டி விட்டு ஜன்னல் வழியாக முதல் மாடியிலுள்ள தன் அறையிலிருந்து கீழே குதித்தார்.

இதனால் காலில் உள்ள தசை நார்கள் கிழிந்தன. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பொலிசில் புகார் செய்து, அதன்பின்பு வேறு ஓட்டலுக்கு மாறினார்.

மத்திய பிரதேசத்தில் சுவிட்சர்லாந்து பெண் ஒருவர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆக்ராவிலும் வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top