புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் மண்டலம் கே.புடுகுண்டல பள்ளி கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று மாலை 4 மணியளவில் கிராமத்தில் உள்ள விவசாய
கிணற்றுக்கு சென்றனர். மிகவும் பாழடைந்த அந்த கிணற்றில் 15 பேர் இறங்கினர். தங்களது குழந்தைகளுக்கு, பெற்றோர் நீச்சல் கற்றுக் கொடுத்தனர். கிணற்றில் இருபுறமும் மோட்டார் பைப் பொருத்தப்பட்டிருந்தது. இதில் ஒரு பைப் இருந்த பகுதியின் சுவர் திடீரென இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.

இதில் கிணற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த விமலம்மாள் (29), அவரது மகள் சவுஜன்யா (10), சுனிதா (30), இவரது மகன் சரண் (10), கங்கைய்யா (32), சுரேஷ் (18) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 9 பேர் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக கிராம மக்கள் ஓடிவந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரா என்ற விவசாயி கயிற்றின் உதவியோடு கிணற்றில் இறங்கி 9 பேரையும் மீட்டார். இதில் பலத்த காயமடைந்த 6 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ரயில்வே கோடூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையறிந்த கடப்பா எஸ்பி மணீஷ்குமார் சின்ஹா, சப்&கலெக்டர் பிருத்திமீனா, எம்எல்ஏ சீனிவாசலு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். ராட்சத கிரேன்கள் மூலம் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகிவிட்டதால் இன்று காலை மீண்டும் மீட்பு பணி தொடங்கியது.

கிரேன்கள் மற்றும் ஜேசிபி உதவியுடன் சுமார் 20 அடி ஆழம் வரை கிணற்றில் பள்ளம் தோண்டி சடலங்களை மீட்டனர்.பாழடைந்த கிணறுகளை மூடும்படி வருவாய் துறையினர் உத்தரவிட்டும் விவசாயிகள் சிலரின் அலட்சிய போக்கால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக எஸ்பி மணீஷ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வே கோடூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top