புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா -விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தை விரும்பாத பெண், திருமணமான ஒரே மாதத்தில், நகை, பணத்துடன், காதலரோடு ஓடினார். இது குறித்த புகாரை அடுத்து, எம்.கே.பி.நகர் போலீசார், அந்த பெண்ணை மீட்டனர்.


வியாசர்பாடியை சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், கல்லூரியில் படிக்கும் போது, ஆரம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரை காதலித்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர், உறவுக்காரரான வியாசர்பாடியை சேர்ந்த மகேஷுக்கு, கடந்த, பிப்., 13ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தால் மனம் உடைந்து காணப்பட்ட காவ்யா, திருமணமான ஒரே மாதத்தில் கணவரை பிரிந்து காதலருடன் சேர முடிவெடுத்தார். வீட்டில் மாமியார் மீனாவிடம், கடந்த, 27ம் தேதி, வெளியே சென்று விட்டு, வருவதாக கூறிச் சென்ற காவ்யா, வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

மேலும், வீட்டில் இருந்த, 5,000 ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளும் காணாமல் போயின. இதனால் சந்தேகமடைந் மீனா, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எம்.கே.பி.நகர் போலீசார், தனிப்படை அமைத்து, காவ்யாவை தேடினர்.

இதற்கிடையே, தமிழரசனும், காவ்யாவும், எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனரகத்தில் தஞ்சம் அடைந்த தகவல் கிடைத்தது. அவர்களை அழைத்து வந்த போலீசார், இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.

தான் விருப்பப்பட்டே தமிழரசனுடன் சென்றதாகவும், தாலி கட்டிய கணவருடன் செல்ல மறுத்து, பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் காவ்யா தெரிவித்தார். வீட்டில் இருந்து எடுத்து சென்ற, நகைகள் மற்றும் பணத்தை மீட்டுத்தருமாறு மகேஷின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

நகை மற்றும் பணம், தமிழரசனின் தந்தையிடம் இருந்தது, அவற்றை, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தால், பெண்ணுடன் அவரது கணவரின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top