புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மிட்கிராப் ரூயிசிலிப்பில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(34) என்ற பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருடன் பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 மற்றும் அவரது கணவரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். கணவரின் பெற்றோர்கள் கடந்த வெள்ளியன்று வெளியூர் சென்றிருந்தபொழுது சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்துள்ளனர். இந்த இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பிரேத பரிசோதனை முடிவிற்காக காத்திருப்பதாக ஸ்காட்லாண்டு யார்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் லேப் டெக்னீசியனான அவருக்கு விஷமருந்துகள் தயாரிக்கத்தெரியும் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் விஷமருந்து குடித்து அவர்கள் இறந்தனரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top