புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் ரெனிக்கென்டோர்ஃப்(Reinickendorf) அருகே வசித்த வந்த ரோஸ்மேரி(Rosemarie) என்ற 67 வயது மூதாட்டி தான் குடியிருந்த வீட்டை விட்டு வெளியேறி காப்பகம் வந்து சேர்ந்த இரண்டு
நாட்களில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் நீண்ட மாதங்களாக அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தந்ததாலும், தீ வைத்துக் கொளுத்தப் போவதாக மிரட்டியதாலும் வீட்டின் உரிமையாளர் கடந்த பெப்ரவரி மாதம் இவரை வீட்டை விட்டுத் துரத்த முயன்றபொழுது 200 பேர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர் Warmth With The Heart என்ற முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட இரண்டு நாட்களில் ரோஸ்மேரி அந்த முதியோர் இல்லத்தில் இறந்துள்ளார். இவர் இறந்த செய்தி கேட்டதும் சுமார் 300 பேர் இந்த வீட்டின் முன்னர் கூடி தங்களின் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து இவரை கடைசியாகப் பார்த்த இந்த முதியோர் இல்லத்தின் தலைவி கூறுகையில், ரோஸ் மேரி மலையில் அடிவாரத்திலிருந்து இறங்கி நடக்கும்பொழுது பலமுறை வாந்தி எடுத்தார். இதனால் களைப்புடன் காலையில் படுத்த இவர் அன்று மாலை இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

ரோஸ்மேரி தன்னிடம் வசதி இல்லாத காரணத்தால் வெப்பம் மின்சாரம், தொலைபேசி போன்ற அடிப்படை வசதிகளின்றி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top