புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவைச் சேர்ந்த லூ காங் என்பவர் தனது 5வது வயதில் சிசுவான் மாகாணத்திலிருந்து கடத்தப்பட்டார்.
அவர் அங்கிருந்து 1500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள புஜியான் மாகாணத்தில், தன்னை தத்தெடுத்த பெற்றோர்களுடன் 23 வருடங்கள் வாழ்ந்து வந்தார்.

தத்தெடுத்தவர்கள் அவரை நல்ல முறையில் வளர்த்து வந்தனர். ஆனாலும் லூ காங்க்கு தனது உண்மையான பெற்றோரை காண வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்து வந்தது.

சீனாவில் காணாமற் போன குழந்தைகளை மீட்பதற்காக ஒரு இணையத்தளம் இயங்கி வருகிறது. லூ காங் தனக்கு நினைவில் இருந்த சில இடங்களை வைத்து சொந்த ஊரின் படத்தை வரைந்து இந்த இணையத்தளத்தில் வெளியிட்டார்.

இதைப்பார்த்த ஒருவர், சிசுவான் மாகாணம் குவான்கன் நகரத்தில் உள்ள ஒரு தம்பதி 23 வருடங்களுக்கு முன்னர் தங்கள் மகனை தொலைத்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதனால் லூ காங், கூகுள் செயற்கை கோள் வரைபடத்தில் குவான்கன் நகரத்தை தேடினார். அப்போது, இவர் சிறு வயதில் பார்த்த இரட்டைப் பாலங்களை அடையாளம் கண்டு கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த நகரத்தில் வசித்து வந்த தனது உண்மையான பெற்றோருடன் லூ காங் தனது 28வது வயதில் இணைந்துள்ளார்.

 
Top