புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவிலுள்ள ஒஹியோ பகுதியில் வசித்த பெர்ரி(26), ஜினா டெஜெசூஸ்(23), மிச்செலி நைட்(20) ஆகிய 3 பெண்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தினங்களில் மாயமானார்கள். அப்போது அனைவரும் சிறுமிகளாக இருந்தனர். கடை மற்றும் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு நோக்கி திரும்பும்
போது மாயமானவர்கள். பின்னர் இவர்கள் கதி என்ன? ஆனது என்று தெரியாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று  போலீசாருக்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ‘என்னுடைய பெயர் பெர்ரி. 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவள். என்னை வந்து மீட்டு செல்லுங்கள்’ என்று கூறியதுடன் தான் இருக்கும் முகவரியையும் கொடுத்தார். உடனே போலீசார் சிலேவெலாந்து பகுதியிலுள்ள குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று 3 பெண்களையும் மீட்டார்கள். அங்கு மேலும் 2 சிறிய குழந்தைகளும் இருந்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பெண்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதே வீட்டில் வசித்த பள்ளிக்கூட பஸ் டிரைவர் ஏரில் காஸ்ட்ரோ(52) மற்றும் அவருடைய 2 உறவினர்கள் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரிக்கிறார்கள். இந்த பெண்கள் இந்த வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தார்கள்? இத்தனை காலம் அங்கே எப்படி வசித்தார்கள்? என்பதில் பல மர்மங்கள் புதைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். பிடிபட்ட நபர்களிடம் விசாரணை முடிந்தால் தான் விவரம் தெரியவரும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்களது குழந்தைகள் பல ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்டதை கேட்டு உறவினர்கள் மகிழ்ச்சியையும், நன்றியும் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top