புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் ஒருவரை கடத்தி அவரிடம் பணம் மற்றும் பொருட்களை களவாடிய இருவரை அந்நாட்டுப் பொலிஸார் தேடி
வருகின்றனர்.

அல்-ரொவாதா எனும் பகுதியில் இடம்பெற்றச் சம்பவத்தில் இலங்கை பணிப்பெண்ணிடம் இருந்து 200 குவைத் தினார் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியன களவாடப்பட்டுள்ளதாக அல்-சஹிட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கை பெண்ணை காரில் கடத்திய இருவர் விடுதலை செய்ய வேண்டுமாயின் 500 தினார் பணத்தை கோரியுள்ளனர்.

இந்த நிலையில் தன்னிடம் அவ்வளவு தொகை பணம் இல்லை எனவும் தன்னை தனது வேலை வழங்குநர் வீட்டுக்கு செல்ல அனுமதித்தால் பணம் பெற்றுத் தரப்படும் எனவும் இலங்கை பணிப்பெண் கூறியதை அடுத்து அவர் காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வீட்டுக்கு அருகில் சென்று வேலை வழங்குநரை கார் சாரதியிடம் காட்டியபோது கார் சாரதி பெண்ணை உதைத்து வெளியே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து அப்பெண்ணின் வேலை வழங்குநர் ரொவாதா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை பணிப்பெண்ணை விசாரணை செய்த பொலிஸார் சந்தேகநபர்கள் மற்றும் அவர்கள் பயணித்த கார் குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டு விசாரணை நடாத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top