புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதலனுடன் மாயமான மாணவியை தேடி தாம்பரம் போலீசார், உ.பி.க்கு விரைந்துள்ளனர்.
தாம்பரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் காஞ்சனா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம்
வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவரது தாத்தா, பாட்டி, தாம்பரம் சண்முகம் சாலையில் கடை வைத்துள்ளனர். அங்கு அடிக்கடி சென்று வருவார் காஞ்சனா. அதே பகுதியில் உள்ள வாசு என்பவரின் பானி பூரி கடையில் உ.பி.யை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் வேலை பார்க்கிறார்.

பானி பூரி சாப்பிட அடிக்கடி சென்ற காஞ்சனாவுக்கும் விக்னேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த விஷயம் வாசுவுக்கு தெரிந்ததும், விக்னேஷ்குமாரை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார். அதற்கு பிறகு இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலையூரில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு சென்று வருவதாக அம்மாவிடம் கூறி சென்றார் காஞ்சனா. அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த 30 பவுன் நகையும் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். காஞ்சனாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே தாம்பரம் போலீசில் காஞ்சனாவின் தந்தை நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் விக்னேஷ்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ.60 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நகையை விற்று, அந்த பணத்தை காஞ்சனாவே விக்னேஷ் குமார் அக்கவுண்டில் போட்டதும் தெரியவந்தது. காதலன்தான் அவரை உ.பி.க்கு கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். காதல் ஜோடியை தேடி போலீசார் உ.பி.க்கு விரைந்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top