புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய முதல் லீக் போட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள்
மோதின. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஜெயவர்த்தனே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக வீரேந்திர் சேவாக் மற்றும் மகிளா ஜெயவர்த்தனே விளையாடினர்.  சேவாக் 11 ரன்னில் பால்க்னர் வீசிய பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த கௌதம் 2 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய டேவிட் வார்னர், ஜெயவர்த்தனேவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். வார்னர் 13 ரன்னிலும், ஜெயவர்த்தனே 34 ரன்னிலும் வெளியேறிய நிலையில், ரோஹ்ரர் மற்றும் ஜாதவ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ரோஹ்ரர் 40 பந்துகளில் 64 ரன்களும், ஜாதவ் 21 பந்தில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட் மற்றும் ரெஹானே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

சிறப்பாக விளையாடிய டிராவிட் 53 ரன்கள் எடுத்தபோது, காவுள் வீசிய பந்தில் அவுட் ஆனார். ரெஹானேவுடன் ஜோடி சேர்ந்து வாட்சனும் அதிரடியாக விளையாடினார்.

இதனால் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ரெஹானே 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top