புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வெள்ளவத்தை விகாரை லேனை அண்மித்து காலி வீதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவரில் இருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு (05.04.13) வௌ்ளவத்தை காலி வீதியில் மஞ்சள் கோட்டினால் வீதியினை கடக்க முயன்ற மூவரை கார் மோதியமையினால் இவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய பாலசூரியன் வாரணி என்ற பெண் உயிரிழந்தார். 16 வயதுடைய ஜீவன் ஜனனி, 13 வயதுடைய ஜவன் ஜனன் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் யுவதியின் நிலை கவலைக்கிடமாகி அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மூவரும் மஞ்சள் கோட்டினால் வீதியைக் கடக்க முற்பட்டுள்ளனர். இவர்கள் கடக்க அவதானித்த வாகனமொன்று மஞ்சள்கோட்டிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதற்கு அப்பால் சென்ற கார் இந்த மூவரையும் மோதியுள்ளது. இதனால் பல அடிதூரத்திற்கு இந்த மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

மூவரையும் மோதிய கார் தப்பிச் சென்றதையடுத்து பொலிஸார் வேகமாக செயற்பட்டு குறித்த காரை கொழும்பு 4 தும்முல்ல சந்தியில் கைப்பற்றி உள்ளதுடன் காரைச் செலுத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

இது குறித்து வௌ்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமரக்கோன் தகவல் தருகையில் நேற்று முன்தினம் இரவு வௌ்ளவத்தை விகாரமாவத்தை சந்தியில் அமைந்துள்ள மஞ்சள் கோட்டினால் உறவினர்களான மூவர் வீதியைக் கடந்து செல்கையில் வேகமாக சென்ற கார் இவர்கள் மூவரையும் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து அங்குள்ளவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது சிகிச்சை பலனின்றி நேற்றுக்காலை வாரணி உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தொடர்ந்தும் விசாரணை இடம் பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதே வேளை இது குறித்து மேலும் கிடைத்துள்ள தகவலின்படி சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜீவன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர்.

தம் விடுமுறையை கழித்துவிட்டு சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்தவேளையிலேயே இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜீவன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் 16 வயதுடைய ஜனனி உயிரிழந்ததுடன், ஜீவனின் சகோதரியின் மகளான 29 வயதுடைய பாலசூரியன் வாரணி படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, மேலும் படுகாயமடைந்த ஜீவனின் மகன் 13 வயதுடைய ஜனன் கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிசைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.















0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top