புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் ராக்வில்லே சென்டர் பகுதியில் வசிப்பவர் ராபர்ட் ஷியாவில்லே42 வயதாகும் இவருக்கு நரம்பியல் கோளாறு உள்ளது. இதனால் சில சமயங்களில் தானாக சத்தம்போட்டு சிரிப்பார்.



இவரது சிரிப்பால் கடும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக, அயலவர்கள் பொலிசில் புகார் செய்தார். பொலிசார், உண்மையிலேயே ராபர்ட்டின் சிரிப்பு மற்றவர்களுக்கு தொந்தரவாக உள்ளதாக என்பதை கவனிக்க ஒரு பொலிஸ்காரரை அனுப்பினர்.

அந்த பொலிஸ்காரர் சென்று ஆராய்ந்ததில், கடந்த மாதம் 12 மற்றும் 13ம் திகதிகளில் ராபர்ட் சத்தம்போட்டு சிரித்ததாகவும், அது வீதி வரை எதிரொலித்தது என்றும் அறிக்கை அளித்தார்.

இதன்பேரில், ராபர்ட்டுக்கு 2 நோட்டீஸ் அனுப்பிய பொலிசார், ஒவ்வொரு நோட்டீசிலும் சத்தம் போட்டு சிரித்ததற்காக ரூ.13,750 அபராதம் அல்லது 15 நாள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதன்படி, 2 நோட்டீசிலும் சேர்த்து அவர் ரூ.27,500 அபராதம் கட்ட வேண்டும் அல்லது ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ராபர்ட் கூறுகையில்…

‘என்னுடைய நோயை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் பயங்கரமாக திட்டுவார். ஆனால், அவருடன் சண்டை போட முடியாது என்பதால், வெறுமனே சிரிப்பேன். இதனால் அவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

சொந்த வீட்டில் சிரிப்பது குற்றம் என்பது வேறு எங்குமே கேள்விப்படவில்லை’’ என்றார்.

அபராதத்தை எதிர்த்து ராபர்ட்டின் வக்கீல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது விசாரணையில் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top