புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஆடை தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி பிரியன்ஜித் பெரேரா நீதிமன்றில் தெரிவித்தார்.
நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்று திங்கட்;கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது,

கொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் 67 காயங்கள் இருந்தன. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட விரல் அடையாளங்களும் காணப்பட்டன.

யுவதியின் உள்ளாடையில் 20 சென்ரி மீற்றர் நீளமான இரத்தக் கறை காணப்பட்டது.

அத்துடன் யுவதியின் உள்ளாடை அவரது உடம்பில் காணப்படவில்லை. அத்துடன் அவரது முதுகுப் பகுதியில் சிராய்ப்புக் காயங்களும் இருந்தன.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிளா திசாநாயக்க என்ற 23 வயதுடைய இளம் யுவதியே கொலை செய்யப்பட்டவராவார்.

இச்சம்பவம் தொடர்பில் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top