புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சாப்பிடும்போது கழிப்பிடத்தை நினைத்தாலே பசி போய்விடும் சிலருக்கு. இப்படி இருக்கையில் லண்டனில் 80 லட்சம் ரூபாய் செலவில் ஆண்கள் சிறுநீர் கழிப்பிடம் ஒன்று உணவகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


விக்டோரியா காலத்தைச் சேர்ந்த அந்த பொது கழிப்பிடத்தை நன்றாக சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் அலங்கரித்துள்ளனர். தி அட்டேண்டன்ட் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்த உணவகம் கடந்த மாதம்தான் திறக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை அந்த காலத்தின் அழகான கட்டமைப்பை மாற்றாமல் உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.

இதைப்பற்றி உணவகத்தின் உரிமையைளர் டாம்லின்சன் கூறுகையில், “மிகுந்த கவனத்துடன் இந்த இடத்தை சுத்தம் செய்துள்ளோம். சிறந்த சமையல் வல்லுநர்கள் வைத்துதான் இங்கு சிற்றுண்டி தயாரிக்கிறோம். இடத்திற்கு அதிகம் முதலீடு செலுத்தாமல் உணவின் தரத்திற்கு செலவு செய்துள்ளோம்” என்றார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top