புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடல் படத்தில் நடித்த கெளதமுக்கு அதன்பிறகு படங்கள் கிடைப்பதே பிரச்சினையாக இருந்தது. ஆனால் அப்படி படங்கள் கிடைத்தபோது அவர்களிடம் எக்குத்தப்பாக சம்பளம் கேட்டு அதிர வைத்தார் நவரசநாயகன் கார்த்திக். இதனால் கெளதமை பலர்
கைகழுவி விடும் நிலையில் இருந்தார்கள். ஆனால் பின்னர்தான் தனது வெட்டி பந்தாக்களை விட்டு விட்டு, என் மகனின் சம்பளத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று நைசாக நழுவிக்கொண்டார் நவரசம்.

ஆனால், கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபுவின் தந்தையான பிரபு அப்படியில்லை. மகன் விசயத்தில் அவர் தலையிடுவதே இல்லை. யாராவது கதை சொல்ல வந்தால், அவரிடமே சொல்லுங்கள். அவருக்கு பிடித்திருந்தால் கால்சீட் தருவார். அவரை வைத்த நல்லவிதமாக படத்தை பண்ணுங்கள் என்று டீசன்டாக சொல்லிவிட்டார் விலகிக்கொள்கிறார்.

அதுமட்டுமின்றி, சம்பள சமாச்சாரத்தில்கூட பெரிதாக கெடுபிடி செய்வதில்லை பிரபு. இப்போதுதான் மகன் வளர்ந்து வருகிறார். இந்த நேரத்தில் சம்பளத்தை விட நல்ல கதையும், நல்லவிதமாக படம் பண்ணும் டைரக்டர்களும்தான் தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார். இதனால் கெளதமை விட விக்ரம்பிரபுவை வைத்து படம் பண்ணவே கோடம்பாக்கத்தினர் ஆர்வமாக உளளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top