புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருப்புகழ் என்ற படத்தின் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். இனி இந்தப் படத்தின் பெயர், திரு - புகழ். ஏன்? எப்படி? எதற்கு?



பெண்கள் சின்ன வயதில் பட்டம்பூச்சியைப் போல் சிறகடித்து சுதந்திரமாக வளர்கிறார்கள். வளர்ந்த பிறகு பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் ரொம்பவே அவஸ்தையை அனுபவிக்கிறார்கள். அன்பின் பெயரால் பெண்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்...

நீயா நானாவின் ஸ்பெஷல் கெஸ்ட் பேசியதல்ல இது. திருப்புகழ் படத்தின் கதைதான் இது. இந்த‌க் கதையை ஆதாரமாக வைத்து எதை காட்டியிருப்பார்கள் என்பதை யூகிப்பது கடினமல்ல.

படத்தை முடித்து சென்சாருக்கு காட்டிய போது, கடுமையாக ஆட்சேபித்திருக்கிறார்கள். விஸ்வரூபத்துக்குப் பிறகு கண்ணில் விளக்கெண்ணெ‌யை கொஞ்சம் அதிகமாக ஊற்றிதான் ஒவ்வொரு படத்தையும் பார்க்கிறார்கள். திருப்புகழ் என்ற ஆன்மீக தலைப்பில் இந்தப் படத்தை அனுமதித்தால் அவ்ளவுதான் என்று பெயரை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். விளைவு...?

எம்டன் மகன் எம் மகன் ஆன மாதி‌ரி திருப்புகழ் திரு - புகழ் ஆகியிருக்கிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top