
அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் டபிள்யூ.டபிள்யூ. ஈ மல்யுத்தப் போட்டிகளை ஆவலுடன் பார்த்து, ரசித்து வந்தான்.
சம்பவத்தன்று ஐந்தே வயதான தனது ஒன்றுவிட்ட தங்கையை கட்டிலின் மேல் தள்ளிய அவன் டி.வி.யில் காட்டப்படுவதைப் போலவே அந்த சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்துகளை விட்டான். அவளது மார்பிள் அமர்ந்துக்கொண்டு தனது முழங்கையால் மார்பு, தொண்டை ஆகியவற்றின் மீது மாறி, மாறி தாக்கினான்.
வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழுது கதறிய போதும் அவனது ஆவேசம் தணியவில்லை. சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயங்கி விழுந்ததும் அங்கு வந்த அவளது தாயார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு விரைந்தார்.
ஆனால், வரும் வழியிலேயே அவளது உயிர் பிரிந்து விட்டதாக கூறி டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். பிரேத பரிசோதனையில் சிறுமியின் மார்பு எலும்பு முறிந்து, ஈரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் உயிர் பிரிந்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த ‘பாசக்கார’ அண்ணனை கைது செய்த போலீசார் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு டபிள்யூ.டபிள்யூ. ஈ நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. எனினும், இந்த படுகொலைக்கு தங்களது நிகழ்ச்சிகளை காரணமாக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக