புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாலஸ்தீனத்தில் 21 வயதாகும் ஒரு பெண்ணுக்கு, திருமணமாகி 7 வருடங்களில் 11 குழந்தைகள் பிறந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்தவர் ராத் அல் பாதாஷ். தற்போது 25 வயதாகும் இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது பெண் ஒருவரோடு திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவிக்கு வயது 21.

இந்த தம்பதியரின் 7 ஆண்டு திருமண வாழ்க்கையில் இவர்களுக்கு இதுவரை 11 குழந்தைதகள் பிறந்துள்ளனர்.

இதுவரை மூன்று முறை கர்ப்பமாகியிருக்கும் இந்த இளம் பெண், ஒரு பிரசவத்தில் ஆண் இரட்டையர்களை பெற்றெடுத்தார். இரண்டாவது முறை நான்கு பெண் குழந்தைகளையும், மூன்றாவது முறை ஐந்து பெண் குழந்தைகளையும் ஓரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

ரவுக் அல்ப்பதாஸ் அரசு ஊழியராக உள்ளார். 11 குழந்தைகளை வளர்ப்பதற்கு போதிய பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். 11 குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. ஆனாலும் உணவுக்கும், மற்ற தேவைகளுக்கும் இது போதவில்லை என்று ரவுக் அல்ப்பதாஸ் கூறினார்.

இதுகுறித்து 11 குழந்தைகளின் தாயான 21 வயது இளம்பெண் கூறுகையில், எனது 9 மகள்கள் மற்றும் 2 மகன்களால் எனக்கு அதிக மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கிறது. ஆனால், எனது கணவர் இவர்களை சரியாக கவனித்துக்கொள்ள போதுமான பணம் இல்லாமல் கஷ்டப்படுவது வருத்தமளிக்கிறது எனத் தெரிவித்தார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top