புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை
தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
இதனைத் தவிர்ப்பதற்கு சீரான முறையில் கணனி வன்தட்டிலுள்ள கோப்புக்களை பேக்கப் செய்வது பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பேக்கப் செய்யும் வசதி விண்டோஸ் இயங்குதளத்துடன் தரப்பட்ட போதிலும் அதனைவிட வினைத்திறனான முறையில் பேக்கப் செய்யும் மென்பொருட்களும் காணப்படுகின்றன.

இவ்வாறான மென்பொருட்களில் AISBackup எனப்படும் மென்பொருளும் சிறந்ததாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் குறிப்பிட்ட கோப்புறைகள், கோப்புக்கள், வன்தட்டுக்கள், CD, DVD போன்ற அனைத்து வகையான சேமிப்பு சாதனங்களிலும் காணப்படும் தரவுகளை பேக்கப் செய்ய முடியும்.

இது தவிர பேக்கப் செயன்முறையை குறித்த கால இடைவெளியில் சுயமாகவே செய்யக்கூடியதாகக் காணப்படுவதுடன் பேக்கப் செய்யப்பட்ட தரவுகளை கடவுச்சொற்களைக் கொண்டு பாதுகாக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top