புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த 159 பேர் படகு மூலம் துருக்கியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு இத்தாலி வழியாக ஐரோப்பியாவிற்குள் புக முயன்றனர்.

நடு இரவில் இத்தாலி அருகே அவர்கள் வந்த படகு பிரச்சினைக்கு ஆளானது.

இதனால் அவர்கள் அனைவரும் தொடர்ந்து அபயக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இதன்போது அந்த படகில் இருந்த ஒருவருக்கு குழந்தை பிறந்தது. பின்னர் அங்கு வந்த கடற்படையினர் கடலில் உயிர் பிழைக்க வேண்டி கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தவர்களை அவதானித்தனர்.

உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நேரம் தண்ணீர் இன்றி தவித்ததால் அவர்களில் 4 பேருக்கு நீர் சத்து குறைவு பாதிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு காலநிலை நன்றாக உள்ளதால், மேலும் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பியாவிற்குள் குடிபுக முயல்வார்கள் என்று கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top