புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லண்டனை சேர்ந்த கிறிஸ்துவ பெண் மத குரு ஒருவர் மேலாடை இல்லாமல் விளம்பர படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
பெண்களிடையே மார்பக புற்று நோய் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, லண்டனைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வால் பேப்பர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் 250 பெண்கள் மேலாடை இல்லாத வகையிலான போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த வால் பேப்பர்களின் மூலம் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக லண்டனைச் சேர்ந்த பல்வேறு தரப்பு பெண்களும் மேலாடை இல்லாத நிலையிலான போஸ் கொடுத்தனர்.

அதில் 65 வயதான கிறிஸ்தவ பெண் மத குரு கரோலினும் கலந்து கொண்டு போஸ் கொடுத்தார்.

இதில் கலந்து கொண்டதன் மூலம் தான் பெருமை அடைந்துள்ளதாகவும், இந்த வருவாய் நோயாளிகளுக்குப் பயன்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top