புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மறைந்த இயக்குனரும், நடிகருமான மணிவண்ணனின் உடலுக்கு பாரதிராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பிரபல நடிகர் மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.


அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று மாலை உடல் தகனம் நடைபெறுகிறது.

இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படுகிறது.

மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top