புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரித்தானியாவில்  5 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு குடல் வால் அறுவை சிகிச்சைக்கு பதிலாக, கருப்பையை அகற்றியதால் பரிதாபமாக மரணமடைந்தார்.
லண்டன் அருகே உள்ள டகென்ஹாம் பகுதியை
சேர்ந்தவர் மரியா டி ஜீசஸ்(வயது 32).

3 குழந்தைகளுக்கு தாயான இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இருப்பினும் அவ்வப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அவரை சோதித்த மருத்துவர்கள், இரண்டாவது முறையாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் வலி தீர்ந்து விடும் என்று கூறினர்.

5 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு லண்டன் ராம்போர்ட் நகரில் உள்ள குயீன்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் திகதி குறித்தனர்.

மயக்க நிலையில் அறுவைசிகிச்சை மேஜையில் கிடந்த அவருக்கு 2 பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பின்னர் வயிற்றுப் பகுதியில் வினோதமான வலியை அவர் உணர்ந்தார்.

இது தொடர்பாக வார்ட் கூறிய உடன் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது தான் நடந்திருக்கும் விபரீதத்தை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்தது.

பிரச்சினைக்குரிய குடல் வாலை அகற்றுவதற்கு பதிலாக கருப்பையை அகற்றிவிட்ட அபத்தம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

சுமார் 2 வார காலமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மரியா டி ஜீசஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடரப் போவதாக அவரது கணவர் கூறியுள்ளார்.!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top