ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகரறில் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் துவம்சாபுரத்தின் அருகே நெடுஞ்சாலையின் ஓரம் 7 வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
இதனை அப்பகுதி வழியே சென்றவர்கள் மயக்கநிலையில் கிடந்த சிறுமியை 108க்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அச்சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
சிறுமி கூறுகையில், என் பெயர் அமோகா, நான் என் குடும்பத்தினருடன் ஜதராபாத்தில் உள்ள எனது உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றிருந்தேன். அத்திருமண விழாவில் என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அப்பிரச்சனையில் எனது தந்தை என்னுடைய தாயாரை அத்திருமணவிழாவில் விட்டுவிட்டு என்னை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு செல்லும் வழியில் காரின் கதவை திறந்து என்னுடைய அப்பா ஒடும் காரில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார் என அச்சிறுமி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அமோகாவின் தாயார் தனது மகளை காணவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்து அங்கு சென்று தனது மகளை பார்த்தார். இச்செயலை செய்துவிட்டு தலைமறைவாகிய அமோகாவின் தந்தையை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக