
குழந்தை சிரிப்பாலும், கொள்ள அழகாலும் ரசிகர்களின்
இதயங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்திருந்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தவர்.
தற்போது ரம்பா சில வருடங்களுக்கு முன்னர் கனடா தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் அவ்வப்போது சின்னத்திரையில் டி.வி. ஷோக்களில் தலைகாட்டினார்.
தற்போது இரண்டு வயது பெண் குழந்தை லான்யா மற்றும் கணவருடன் கனடாவில் வசித்து வருகிறார். ரம்பா கடந்த யூன் 6ம் திகதி தனது பிறந்தநாளை கனடாவில் உள்ள சிஎன்என் டவரில குழந்தை மற்றும் கணவருடன் கொண்டாடினார்.
பிறந்தநாள் குறித்து ரம்பா கூறுகையில், நான் தற்போது குடும்பத்துடன் கனடாவில் செட்டிலாகிவிட்டாலும், இந்தியாவை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
இங்குள்ள தமிழ் சினிமா ரசிகர்கள், சென்னை ஷாப்பிங் எப்போதும் என் நினைவில் உள்ளன. நல்ல படங்களை தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கான வாய்ப்பும், நல்ல கதையும் அமைந்தால் நிச்சயம் படம் பண்ணலாம் என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக